TRB Recruitment 2019: வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கு ஆசிரியர் தேர்வு அறிவிப்பு.. பி.எட் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..
TN TRB Recruitment 2019: TN TRB Educational Officer Recruitment 2019: தமிழக தொடக்கல்வித்துறையில் வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்ளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Teachers Recruitment Board) புதிதாக வேலைவாய்ப்பு அறிவிக்கையை www.trb.tn.nic.in இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, வட்டார கல்வி அலுவலர் பணிக்கு 97 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மாதம் ரூ.36,900 – ரூ.1,16,600 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

முக்கிய நாட்கள்:
TN TRB Educational Officer Recruitment 2019 தேர்வு அறிவிக்கை வெளியான நாள் 27 நவம்பர் 2019. விண்ணப்பம் தொடங்கும் நாள், ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள், ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும். எனவே, விண்ணப்பதார்கள் தொடர்ந்து www.trb.tn.nic.in இணையதளத்தைப் பார்வையிட்டு வரவும்.