இளம்பெண்ணுக்கு வந்த செல்போன் அழைப்பு... 3-வது மாடியில் இருந்து விழுந்து பலி..!

சென்னை அருகே செல்போனில் பேசியவாறு மாடியில் நின்றுகொண்டிருந்த போது தவறி விழுந்த இளம்பெண் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.


சென்னை திருவல்லிக்கேணியில் வசித்து வந்தவர் மதுமிதா (17). பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மதுமிதா அப்பகுதியில் உள்ள தனியார் அச்சகம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் புதன்கிழமை அன்று வீட்டிலிருந்த மதுமிதா செல்போன் பேசியபடி 3வது மாடிக்கு சென்றுள்ளார்.


அப்போது அங்கிருந்த அவர் நிலைதடுமாறி திடீரென 40 அடியில் இருந்து கீழே விழுந்தார். இதனை கண்டு பதறிப்போன அவருடைய தந்தை வீரபத்திரன் மகளை மீட்டு பெல்ஸ் சாலையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு மதுமிதாவை சோதித்து பார்த்த மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என கூறி ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்க பரிந்துரை செய்தனர்.

பின்னர் அங்கிருந்து உடனே ஆம்புலன்ஸ் மூலம் மதுமிதா கொண்டு செல்லப்பட்டு அங்கு சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை அன்று மதுமிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.